சீனத் தூதுவருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

இலங்கையின் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சாங்ஹோங்கை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, ​​இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்த சீனத் தூதுவர், சீன அரசாங்கம் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் தனது ஆதரவை வழங்கும் என உறுதியளித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி உதவி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் உட்பட தற்போதைய நிலைமையை விரைவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சீன தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக அரிசி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருவதாக சி சென்ஹோங் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *