நாளைய மின்தடை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் நாளை (21) மற்றும் நாளைமறுதினம் (22) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி,

ABCDEFGHIJKL | PQRSTUVW :

  • மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
  • பி.ப. 5.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *