
நாட்டில் நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு லீற்றர் பசுப்பாலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்க யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் (யாழ்கோ) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கால்நடைத் தீவன விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பால் உற்பத்தி செலவுக்கு ஏற்படும் செலவினை ஈடுசெய்யமுடியாமல் சிரமப்படும் அங்கத்துவப் பண்ணையாளர்களினைப் பாதுகாக்கும் முகமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி புதிய விலையாக எதிர்வரும் முதலாம் திகதி ஒரு லீற்றர் பசுப்பால் 140 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

