
மன்னார் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 13 பேர் கடல் வழியாக தமிழகத்தின் தனுஸ்கோடியைச் சென்றடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை அவர்கள் அங்கு சென்று சேர்ந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் கர்ப்பவதி என்றும் தமிழகத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்ணாடியிழைப் படகில் பயணித்த அவர்கள் தனுஸ்கோடியைச் சென்றடைந்த நிலையில் அவர்களை மீட்டு தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

