
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த ஐவர் இன்று அதிகாலை தமிழகம் தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சில மணி நேரங்கள் முன்னதாக மன்னாரைச் சேர்ந்த 13 பேர் தமிழகம் சென்றிருந்த நிலையில் இன்று அதிகாலை மட்டும் தமிழகத்திற்கு வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 18 பேர் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

