
கொழும்பு, ஏப் 21
எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

