லிட்ரோ நிறுவனத்தின் விநியோகம் இடைநிறுத்தம்!

லிட்ரோ நிறுவனம் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் வசம் தற்போது 1300 மெட்ரிக் தொன் கேஸ் மாத்திரமே கையிருப்பில் உள்ளதால், அதனை பாதுகாப்பு சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் தகனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கவுள்ளதாக தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *