சீமெந்து நுகர்வில் பாரிய வீழ்ச்சி! விநியோகஸ்தர்கள் கவலை

சீமெந்து நுகர்வில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து சீமெந்தின் விலையை 500 ரூபாய் தொடக்கம் 600 ரூபாயினால் உயர்த்த சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக விற்பனையாளர்கள் தொிவிக்கின்றனர்.

அதன்படி சந்தையில் தற்போது 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ரூ.2300 – 2350 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால், சீமெந்தின் புதிய விலையை ரூ.500 – 600 ரூபாவால் உயர்த்த சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்நிலையில் சீமெந்து விலை உயர்ந்துள்ளதாலும், புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாலும் சீமெந்தின் தேவை குறைந்துள்ளதனால் மொத்த விற்பனைக் கடைகளில் சீமெந்து இருப்பு இல்லை எனவும் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *