ரம்புக்கன போராட்டத்தில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை சமிந்த லக்ஷனின் இல்லத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றையதினம் நேரடியாக சென்று திரு சமிந்த லக்கிற்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
இதேவேளை உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தின் அத்தியாவசிய எதிர்காலத்திற்காக நிதி நன்கொடை வழங்கிய எதிர்கட்சி தலைவர் எதிர்கட்சியாக எந்த தருணத்திலும் துணை நிற்பேன் என உறுதியளித்தார்.





