
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரியும் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரியும் நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய பகுதியில் இருந்து ஜெஹான் ஹப்புஹாமி என்பவர் சிலுவையை தாங்கியவாறு காலிமுகத்திடலை நோக்கி நடைபயணத்தை சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார்.
இந்நிலையில் நான்காம் நாளான இன்று காலை வத்தளை தேவாலயத்தில் ஆரம்பித்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று அங்கு ஆராதனையில் ஈடுப்பட்டு பின்னர் அங்கிருந்து நடைபயணம் ஆரம்பமாகி சற்றுமுன் காலிமுகத்திடலை வந்தடைந்துள்ளது.

