பிரதமர், அவர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை

பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய அரசாங்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட சிறி அமைச்சரவையொன்றே அமைக்கப்பட வேண்டும் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *