காலந்தாழ்த்த வேண்டாம்: விரைவில் பெற்றுக் கொள்ளுங்கள்!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் காலந்தாழ்த்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள அரசாங்கம், முதலாவது டோஸ் மருந்தை இதுவரையிலும் பெற்றுக்கொள்ளாதவர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்) சன்ன ஜயசுமன கருத்துதெரிவிக்கையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பலரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்.

அதனால் இல்லையெனக் கூறமுடியாது. ஆகையால் அடுத்த ஒரு வாரத்துக்குள் அவ்வாறானவர்கள் தங்களுக்குரிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் காலந்தாழ்த்த வேண்டாம்
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை செலுத்தும் செயற்றிட்டத்தை தங்களால் தொடர்ச்சியாக முன்னெடுத்துகொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்த அவர், விரைவாக நிறைவுச் செய்யவேண்டும். ஆகையால், இன்னும் சில நாள்களுக்குள் அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல, 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களும் விரைவில் வந்து தங்களுக்குரிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *