ரம்புக்கனையில் கடத்தப்பட்ட இளைஞன் பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்

ரம்புக்கனை பகுதியில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இளைஞர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை – பின்னவல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் சிலரினால் கடத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அவ்வாறானதொரு சம்பவம் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என ரம்புக்கனை மற்றும் கேகாலை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *