நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுப் பரவலுக்கான தடுப்பு மருந்து ஏற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், யாழில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் யாழ். வட்டு இந்துக் கல்லூரி மற்றும், மூளாய் சைவப்பிரகாச வித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான இளைஞர், யுவதிகள் ஆர்வமாய் வருகின்றமையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.





