மதுருப்பிட்டிய – மாஓய பாலத்தில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நபரின் சடலம், ஐந்து தினங்களின் பின்னர் கரைஒதுங்கியுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர், லோலுவாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஏ.அமரசிங்க என தெரியவந்துள்ளது.
மேலும் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிளில், மீரிகமவிலிருந்து அலவ்வதல்வத்த பிரதேசத்துக்கு செல்லும் போது அவர் பாலத்தைக் கடக்க முற்பட்டுள்ளார்.
எனினும், பாலத்துக்கு மேல் ஓர் அடிக்கு வெள்ளநீர் வழிந்தோடிய நிலையில் வெள்ள நீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது.
குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் கடந்த 18ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது.
அவரது சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டுவந்த நிலையிலேயே, சடலமானது மிகவும் உக்கிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன் கிரிஉல்ல பாலத்துக்கு அருகிலிருந்து புதரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.





