இந்தியாவில் கரும்பூஞ்சை நோய் தொற்றுக்குள்ளான நான்காயிரத்து 300 க்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளனர்.
அந்த நாட்டு சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நோய் தொற்றுக்காரணமாக இதுவரை 45 ஆயிரத்து 374 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயானது மூக்கு, கண் மற்றும் மூளை ஆகிய பாகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று குணமடைந்து 12 முதல் 18 நாட்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த கரும்பூஞ்சை நோய் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.