ரிஷாட் வீட்டில் மேலும் இருவரிடம் வாக்குமூலம்

ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் உட்பட மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்று மேலும் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியை சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு முன்னர் சேவையில் இணைத்த 21 மற்றும் 32 வயதுடைய பெண்கள் இருவரிடமே இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (21) டயகம பகுதியில் வைத்து குறித்த சிறுமியின் தாய், சிறிய தந்தை, சகோதரன் மற்றும் சகோதரியிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply