திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய ஒருவரையே இன்று கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது, குறித்த வீட்டின் பின் பக்கமாக உள்ள காணியில் மூன்று கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டின் காணியை சோதனைக்குட்படுத்தியபோதே கஞ்சா செடிகள் கண்டறியப்பட்டதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளமையோடு வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்