
பெரமுனவுக்குள் வருகிறது பிரிவு!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்ட சில கட்சிகள், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வலுப்படுத்துமாறு, முக்கிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் ஆலோசனை தெரிவித்துள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தலைமையில் அண்மையில் நடைபெற்றது.