
பாதுகாப்பற்ற குழிக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!
வீதியின் பாதுகாப்பற்ற கட்டுமான குழிக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பேருவளை நகரில் நடந்துள்ளது.
குறித்த இடத்தில் நகரசபையால் சுமார் ஒரு மாத காலமாக கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் வீதி நிர்மானம் குறித்து அந்த இடத்தில் எந்த அறிவிப்புப் பலகையும் அமைக்கப்படவில்லை.
சம்பவத்தன்று இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பயணித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்து ரயில் கடவைக்கு அருகிலுள்ள கட்டுமானத் தளத்தில் கம்பிகள் மீது இருவரும் வீழ்ந்துள்ளனர்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பேருவளை, மாகலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.