வித்தியாவை அடுத்து இசாலினியா? – நீதி கோரி வவுனியாவிலும் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய இசாலினியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கபப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபப்பட்டது.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக வித்தியாவை அடுத்து இசாலினியா?, சிறுவர் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்போம், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு விரைவாக நீதி வழங்குங்கள், பெண்கள்-சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்போம் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *