தற்பொழுது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகளை இன்றும் நாளையும் மாத்திரம் நடத்துவதற்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயகவால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் இன்று (21) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியிருந்தது.
இந்நிலையில் நாட்டின் நிதி ஏற்பாடு பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றோம் ஆனால் சபையில் நிதி அமைச்சர் இல்லை என எதிர்க்கட்சியினர் சபையில் ஆவேசம் அடைந்துள்ளதால் பாராளுமன்றம் காரசார விவாதங்களுடன் சூடுபிடித்துள்ளது.
மேலும் எதிர்க்கட்சியினர் இன்றைக்கு இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாம் சபையை கூட்டியுள்ளோம்.எதற்காக? நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுவதற்கு.ஆனால் சபையில் நிதி அமைச்சர் இல்லை.பிறகு இதற்கு இந்த சபை அமர்வு.நாம் கேள்வி கேட்க்கின்றோம் வர்த்தக அமைச்சர் பதில் சொல்கின்றார்.
மேலும் அவர் தனது எண்ணப்படி நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளரை மாற்றுகின்றார்.உங்களுக்கு மூளை இல்லையா.நாட்டின் கடனை எப்படி செலுத்த போகிறீர்கள் என்று கேட்ட போது ,அப்போது விடயத்துக்கு பொறுப்பான நபர் என்ற வகையில் கப்ரால் ஒரு பதிலை வேடிக்கையாக கூறினார்.காசை அச்சிடுவோம் என்று.
எனினும் இன்று அவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்துள்ளீர்கள்.அவர் இன்னும் 50 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டு உள்ளதாக எமக்கு தெரிய வருகிறது.
மேலும் இந்த அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் 60 ஆயிரம் கோடி வருமானத்தை தமது பொக்கெற்றுகள் போட்டுகொண்டுள்ளனர்.நிதி அமைச்சரே உங்களால் முடியவில்லை என்றால் உரிய நபர்களிடம் ஒப்படையுங்கள் என தெரிவித்துள்ளனர்.