விதை உற்பத்தி உற்பட அனைத்து பயிர்களையும் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமமே பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்..
நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு சில விதைகள்,மற்றும் பயிர்களின் இறக்குமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.நாட்டில் விதை இறக்குமதிக்கு சுமார் 2 பில்லியன் ரூபா செலவாகின்றது.ஆகவே நாட்டில் முதற் கட்டமாக 50 வீத விதை இறக்குமதியை கட்டுப்படுத்துவதே எமது நோக்கம்.
பேராதனை மற்றும் இலுப்பம ஆராய்ச்சி நிலையங்களில் விதைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முற்று முழுவதுமாக எமது நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்வதற்கு முயற்சிக்கின்றோம்.நூறுவீதம் மிளகாய் இறக்குமதியை கூட செய்யும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.
ஆகவே இந்த நாட்டின் மண் வளத்திற்கு எவ்வாறான உற்பத்திகளை செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் நாம் உற்பத்தி செய்வதற்கு முயற்சிகள் எடுத்துள்ளோம்.மஞ்சள்,உள்ளி உள்ளிட்ட பயிர்களும் இங்கு பயிர்செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அடுத்த 3 வருடத்தில் நூறு வீத பயன்பாட்டை நாம் பெறுவதற்கு உத்தேசித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.