நாட்டை ஆள தெரியவில்லை என்றால் எங்களிடம் தாருங்கள் எனவும் மத்திய வங்கி ஆளுனர் பொருத்தம் இல்லாதவர் எனவும் இன்றைய சபையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன _
“நீங்கள் கடந்த ஆட்சியில் ரணில் விக்ரமசிங்கவின் செல்ல பிள்ளையாக இருந்தீர்கள்.மத்திய வங்கியையும் கொள்ளை அடித்தீர்கள். அப்போது உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தி இருக்கலாம்.
ஆனால், உங்கள் மூளையை பயன்படுத்தி நாட்டை கொள்ளை அடித்தீர்கள்.” என்று தெரிவித்தார்.
மேலும், இன்று மூளை சரியில்லாத நோயாளர்கள் பயன்படுத்தும் மருந்தை நீங்கள் போடாமல் வந்து சபையில் கத்துகிறீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.