வீதித் தடைகளில் எதற்காக கூரிய ஆணிகள் பொருத்தப்பட்டன?

கொழும்பை சூழவுள்ள சில வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற பொருள் பொருத்தப்பட்டு, அவை கறுப்பு பிளாஸ்டிக்குகளால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சங்கம் கூறியுள்ளது.

இதனால், பொலிஸ் மா அதிபர், பொலிஸார் மற்றும் ஆயுதப் படையினர் எந்த நிலைமையாக இருந்தாலும் எதிர்பார்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமை மாத்திரமல்லாது, நாட்டின் பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியம் என சட்டத்தரணிகள் சங்கம் நினைவூட்டியுள்ளது.

ஏதோ ஒரு வகையில் வன்முறையான சூழல் ஏற்பட்டால், அது நாட்டுக்கு மிக மோசமான பிரதிபலனை பெற்றுக்கொடுக்க காரணமாக அமைந்து விடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *