இலங்கைக்கு வருகை தரவுள்ள டீசல் தாங்கிய கப்பல்.!

எதிர்வரும் மூன்று நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய கப்பலொன்று நாட்டுக்கு வருகைத்தரவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், டீசல், சுபர் டீசல், ஒக்டேன் 92, ஓக்டேன் 95 வகை பெற்றோல் ஆகியன போதுமான அளவில் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு போதுமான அளவு எரிபொருள் நாட்டுக்கு கிடைக்கும் நிலையில் நாட்டில் எரிபொருள் வரிசை இல்லாது போகுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், 24 மணித்தியாலமும் எரிபொருளை பெற்றுக்கொடுக்கும் பிரதான மத்திய நிலையமொன்றை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *