வாகனம் ஓட பெற்றோல் இல்லை; கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு! கல்முனையில் ஆர்ப்பாட்டம்

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில், கல்முனையில் மூவின மக்களும் ஒன்றிணைந்து பங்கெடுத்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில், தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அம்பாறை மாவட்ட கல்முனை மாநகரத்தில் இன்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் தீப்பந்தங்களை கையில் ஏந்திக்கொண்டு ” 74வருட சாபக்கேட்டை இல்லாதொழிப்போம் – மக்களை துன்புறுத்தும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கல்முனை பிரதான வீதி ஐக்கிய சதுக்க முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, தேசிய மக்கள் சக்தி பிரதேச அமைப்பாளர்கள், தேசிய மக்கள் சக்தி ஆதரவு இளைஞர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, வாகனம் ஓட பெற்றோல் இல்லை, நாட்டில் மின்சாரம் இல்லை, பிள்ளைகள் குடிக்க பால்மா இல்லை, குழந்தைகள் படிக்க கரண்ட் இல்லை, பரீட்சை இல்லை, கொள்ளை பணம் எங்க, அடுப்பு மூட்ட கேஸ் இல்லை, நாட்டில் எதுவுமில்லை, பசில் வேண்டாம், மஹிந்த வேண்டாம், கோத்தாவே வெளியேறு, நாட்டில் எதுவுமில்லை மக்களுக்கு பசி, பசளை தா, பெற்றோல் தா, பசிலே வெளியேறு, அரசே வீட்ட போ, கோ கோம் கோத்தா, போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *