மின்தடை தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது!

நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மின் விநியோகத்தடையினை அமுல்படுத்தப்படுத்துவதற்கான நேர அட்டவணையினை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

வலயங்களின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலம் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *