நாடு முழுவதுமுள்ள இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்! ரணில் அழைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் , அரசியல் தலைவர்கள் குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என்ற பிரேரணையை ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இதேவேளை,கோட்டாபய – மஹிந்த ஆகியோர் பதவிகளில் இருந்து விலகவேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், ஒரு சிறிய குழுவொன்று, சுதந்திர சதுக்கத்தில் ‘கோட்டா வேண்டும்’ என்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள், கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் தங்களுக்கு வேண்டும். அவ்விருவரும் பதவிகளை விட்டு விலகத்தேவையில்லை என்றெழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி போராடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *