அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த துப்பாக்கி முனையில் முழந்தாளிடச் செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று நடைபெற்ற சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தமை வருமாறு _
தமிழ் இளைஞர்கள் கையில் பொம்மை துப்பாக்கி வைத்திருந்தால் அவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அரசு.
சிறைச்சாலைக்குள் துப்பாக்கியுடன் சென்று தமிழ் கைதிகளை அச்சுறுத்திய இராஜங்க அமைச்சரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.