
அரசுக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டுபாய்க்கு அவசர பயணம்!
அரசுக்கு ஆதரவளித்து வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அவசரமாக டுபாய் சென்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டுபாய் செல்லவுள்ளனர். இவர்களில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன், பின்னர் அரசுக்கு ஆதரவளித்து வருபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.