பொரெல்ல மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளில் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் பக்க கண்ணாடிகளை அகற்றிய நபரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு, வீதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் பக்க கண்ணாடிகளை திருடிய நபரை கண்டுபிடிக்க, பொலிசார்பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர், மோட்டார் சைக்கிளில் சென்று வாகனங்களின் பக்கவாட்டு கண்ணாடிகளை அகற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரினால் வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடிகளை அகற்றும் காட்சியானது, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, குறித்த சந்தேக நபரை கைது செய்ய விசாரணை நடந்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் ,சந்தேக நபரை கைது செய்வதற்கு அவர் பற்றிய தகவலை 119 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது