நாட்டை விற்கும் வகையில் செயற்பட மாட்டேன்: அமைச்சர் டக்ளஸ்

நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (22) நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது சீன நிறுவனத்திற்கு பூனகரி கௌதாரி முனையில் அட்டை பண்ணை அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பிலும் தெரிவித்தார்.

சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில் நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கௌதாரி முனையில் காணியற்ற குடும்பங்களுக்கு பயிற்சியை காணிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *