வெளிநாட்டுப் பெண்ணை கொன்று இருவரை காயப்படுத்திய நபர் கிணற்றிலிருந்து மீட்பு

பெண்ணைக் கொன்று இருவரைக் காயப்படுத்திய நபர் ஒருவர் கிணற்றில் குதித்துள்ளார்

வெலிவேரிய – வெவட என்ற இடத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது சகோதரி மற்றும் நண்பர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலையை செய்த 37 வயதுடைய சந்தேக நபர் அதே கூரிய ஆயுதத்துடன் தனது கழுத்தை அறுத்த நிலையில், அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

சந்தேக நபரை மீட்டெடுத்த பொலிஸார், அவரை பொலிஸ் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *