
கொழும்பு, ஏப் 25
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு, கோப் குழுவில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் தலைவரும் பேராசிரியருமான சரித ஹேரத் தெரிவித்தார்.
இதன்படி இன்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கோப் குழுவில் முன்னிலையாகியுள்ளது.
21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஏல நடவடிக்கை பற்றி ஆராய்வதற்காக, கடந்த 19ஆம் திகதி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு கோப் குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

