கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கராயனை சேர்ந்த 27 வயதுடைய பேரம்பலநாதன் கேசவன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கிய நிலையில் அக்கராஜன் பிரதேச வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அக்கராஜன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.