பட்டம் விடச் சென்ற 8 வயது சிறுவன் தவறுதலாக கிணத்தில் விழுந்து பலி!

தம்புத்தேகம குருகம பிரதேசத்தில் பட்டம் விடச் சென்ற சிறுவன் ஒருவன் நேற்று புதன்கிழமை கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.

9 வயதுடைய சமீர பிரசாத் ரத்னாயக்க என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

நாள்தோறும் காலை வேளையில் பட்டம் விட வயல் வௌிக்கு செல்வதை வழமையாக கொண்டிருந்த சமீர வழமை போல நேற்றும் சென்றுள்ளார்.

Advertisement

பிள்ளை பல மணி நேரமாகியும் வீடு வராததால் குழப்பமடைந்த பெற்றோர் அவரை தோடி சென்றுள்ள நிலையில் பட்டத்தின் நூலினை கண்டு உடனடியாக கிணற்றை சோதனை செய்துள்ளனர்.

பின்னர் கிணற்றில் இறங்கி பார்த்த போது சிறுவன் சுமார் 20 அடி ஆழத்தில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சமீரவை தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *