
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியற் குழப்ப நிலைகள் கடந்த பல வாரங்களாக தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இதன்படி உரிமம் பெற்ற இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 345 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.