இடைக்கால அரசாங்கத்தை ஆறு மாதங்களிற்கு ஏற்படுத்துவதற்கான யோசனை – முன்னாள் ஜனாதிபதி முன்வைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை ஆறு மாதங்களிற்கு ஏற்படுத்துவதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

தனது யோசனைகளை கடிதமொன்றில் தெரியப்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர், “நான் பல கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆழ்ந்த யோசனைக்கு பின்னர், காலிமுகத்திடலில் உள்ள இளைஞர்கள் பெரியவர்களின் கோரிக்கைகளை-மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் பல துறை தலைவர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொள்ளும் முன்மொழிவை முன்வைத்துள்ளேன்.

இடைக்கால அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான யோசனைகளை முன்வைக்கவேண்டும்.

தேசிய கொள்கைகளிற்கான அரச பேரவையை ஏற்படுத்தவேண்டும் . கொள்கைகளை வகுப்பது நடைமுறைப்படுத்துவது உட்பட அனைத்து விடயங்களிலும் அமைச்சரவை தேசிய கொள்கைகளிற்கான அரச பேரவையை கருத்தில்கொள்ளவேண்டும்” எனவும் அவர் அதில தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *