
போலிக் கடவுச்சீட்டுடன் இளைஞன் ஒருவர் கைது!
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மாரவிலப் பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் போலியான கடவுச்சீட்டு மற்றும் இத்தாலி குடியுரிமை விசா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.