அரசியல்வாதிகள் தங்கள் அதிகார விளையாட்டுகளைத் தொடர முடியாது- கரு கண்டனம்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைக்காத நிலையிலும், குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையாலும், எரிபொருளைப் பயன்படுத்துவதில் நீண்ட வரிசையில் நின்று அவதிப்படும் போதும், அரசியல்வாதிகள் தங்கள் வழக்கமான அதிகார விளையாட்டுகளைத் தொடர முடியாது, ஆனால் ஒரு பொதுவான திட்டத்திற்கு ஒன்று சேர வேண்டும். உறுதியற்ற செலவு கொடியது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *