
தென்னிலங்கையில் இடம்பெறும் மக்களின் போராட்டங்களால்,கோட்டா வீட்டுக்கு செல்வாரா,செல்ல மாட்டாரா என்ற உறுதியான நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமூகம் மீடியாவுக்கு வழங்கிய விசேட நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
கேள்வி: தென்னிலங்கையில் இடம்பெறும் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?
பதில் :ஆட்சி மாறுமா என்பது பாரிய கேள்வி.ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போராட்டம் ஓயாது என்பது போலத்தான் தெரிகிறது.
கேள்வி:அரசியல் அமைப்பு ரீதியாக ஜனாதிபதி ஜனநாயக ரீதியாக பதவி விலக முடியாத நிலை காணப்படுகிறது.இந்த நிலையில் வீட்டுக்கு போகும் சாத்தியம் எந்த அளவில் உள்ளது ?
பதில்:மக்களையும் ,நாட்டையும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ள அரசு இப்படியே தொடர்ந்து இருப்பது கூடாது.நாட்டில் மின்சாரம்,எரிபொருள் உள்ளிட்ட எல்லா பிரச்சினையும் இவரால் தான் வந்தது.ஆகவே இவர் பதவி விலகுவது சிறந்தது.
கேள்வி :ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இப்போது தான் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.தமிழ் மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இதை எல்லாம் அனுபவித்தவர்கள்.ஆகவே இந்த இக்கட்டான நிலையில் தமிழ் மக்களின் மனோ நிலை எவ்வாறு காணப்படுகிறது ?
பதில்:கடந்த 30 ஆண்டுகளில் இது போன்ற துன்பங்களை தமிழ் மக்கள் அனுபவித்து வந்தனர்.அப்போது எமக்காக ஒரு சிங்கள இனத்தவர் கூட கதைக்க வரவில்லை.அப்போதும் கூட தமிழ் மக்கள் பயங்கவாதிகள்,என்ற நாமத்தை ராஜபக்ச அரசு தான் தூவி விட்டனர்.அன்று தமிழ் மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.இப்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே கோட்டா அரசை வீட்டுக்கு போ என்று குறுகின்றனர்.
கேள்வி:இலங்கையிலே இராணுவ ஆட்சி அல்லது இராணுவ மயமாக்கல் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.இந்த நிலைமை எவ்வாறானது?
பதில் :இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு இவ்வளவு இராணுவம் தேவையில்லை.போர் காலத்தில் குவிக்கப்பட்டவர்கள் தான் இவர்கள்.உலக நாடுகளில் 14 ஆவது இடத்தில் உள்ள பலமான இராணுவமாக இலங்கை இராணுவம் சொல்லப்படுகிறது.இந்த குட்டித் தீவுக்கு இவ்வளவு இராணுவம் தேவையா.இப்போதும் உடனடியாக இராணுவத்தில் சேர வேண்டும் என்றால்,ஒரு இராணுவ முகாம் ஒன்றுக்குள் சென்றாலே போதும்.
கேள்வி:நாட்டிலே இப்போது நடக்கும் போராட்டம் எந்த வகையில் அமைந்துள்ளது?
பதில்:போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.அவர்களுக்கு ஒற்ரை ஆட்சி ,சம்ஸ்டி ஆட்சி பற்றி தெரியாது.ஆனால் இந்த கோட்டா அரசால் நாடும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் நாட்டுக்கு வேண்டாம் என்று நன்றாக பட்டு உணர்ந்த நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கேள்வி:நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிப்பு ,சமஸ்டி ஆட்சி இந்த நிலைப்பாடு தொடர்பில் உங்களின் கருத்து ?
பதில்:இந்த இரண்டும் எமக்கு வேண்டும்.அதில் எந்த மாற்றமும் இல்லை.
கேள்வி :தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளீர்கள்.இது தொடர்பில் அடுத்த கட்டம் என்ன?
பதில்;முதல் நாம் எமக்குள்ளே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.எங்கள் மக்களுக்கு என்ன வேண்டும் என்று முதலில் நாம் தமிழ் தரப்புகள் ஒன்றாக சிந்திக்க வேண்டும்.அதன் பின்னர் ஏனைய தரப்பு விடயங்களை பார்க்கலாம்.
கேள்வி:காணாமல் ஆக்கப்பட்டவரக்ளின் உறவுகளின் போராட்டம்,காணி அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட தரப்புகள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுகிறது.கட்சி என்ற ரீதியில் எனா செய்தீர்கள்?
பதில்:நாம் மக்கள் போராட்டத்தில் பங்குபற்றவில்லை என்பது பொய்யான கருத்து .இப்ப வரையில் பல போராட்டங்களை நடாத்தி இருக்கின்றோம்.காணி அளவீடு என்றால் நாமும் அங்கே சென்று மக்களோடு நிற்கின்றோம்.இது தவிர இது தொடர்பான அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகின்றோம்.
கேள்வி :தென்னிலங்கையில் 3 மாத காலமாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.நீங்கள் இங்கே என்ன செய்தீர்கள்?
பதில் :ஆம் நாங்கள் போராட்டம் செய்யவில்லை.தென்னிலங்கையில் நிலைமை எப்படி மாறும் என்று யாருக்கும் இதுவரை தெரியாது.ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்றும் தெரியாது.இதனால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்றும் இது வரை தீர்மானிக்கப்படவில்லை.ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தான் சிந்திக்க வேண்டும்.அதற்காக நாம் அந்த போராட்டங்களுக்கு எதிரானவர்கள் இல்லை.

