தடுமாறும் கொழும்பு அரசியல்; ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி விரைவில்- ராஜித அதிரடி!

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுடன் அரசியல் குழப்ப நிலைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில் விரைவில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டமும் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் நிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,

தற்போதைய அரசாங்கம் இன்னும் சில நாள்களுக்கு மாத்திரமே ஆட்சியில் நீடிக்கும் என தெரிவித்ததுடன் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி மலரும் என தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, பிரதமர் கலந்துரையாடியுள்ளார். இதில் வெறும் 88 பாராளுமன்றஉறுப்பினர்களே கலந்துகொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 157 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், 70 சதவீதமானவர்கள் கூடமஹிந்தவுக்கு ஆதரவளிக்கவில்லை.

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள கட்சிகளுடன் கலந்துரையாடி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கொண்டுவர உள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில்,அனைவருடன் கலந்துரையாடிஇணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை விட, அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களின்ஆதரவு உள்ளது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *