கொரோனா தொற்று உறுதியான 918 பேர் அடையாளம்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 918 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 506,927 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 60 ஆயிரத்து 569 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன்,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1ஆயிரத்து 47 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 434,140 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *