யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணைத்தூதர் ஜூலிசங், இன்று காலை 8 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
நல்லூரில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர்பின்னர் யாழ்.மரியன்னை ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதன் பின் யாழ்.மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார்.

