இலங்கைப் பெண்ணின் பாடல் அமெரிக்காவிலும் பிரபலமானது

உலக அளவில் பலராலும் ரசிக்கப்பட்டு வந்த “மெனிகே மகே ஹிதே” பாடலானது, தற்போது அமெரிக்காவிலும் பிரபலமாகியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த ஒரு தெரு நிகழ்ச்சியில், பிரபல குழந்தை வயலின் கலைஞர் கரோலினா ப்ரோட்சென்கோ இந்த பாடலை வயலின் மூலம் பாடி அதன் பிரபலத்தை வெளிக்காட்டியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற குழந்தை வயலின் கலைஞரான இவர், கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவின் வீதிகளில் நிகழ்த்தும் சிறிய நிகழ்ச்சிகளால் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானார்.

அவரது சமீபத்திய வீடியோவில் “மெனிகே மகே ஹிதே” என்ற இலங்கை பாடலை, தனது வயலினில் இசைக்கும் அற்புதமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும், உக்ரேனிய இசைக் குடும்பத்தில் பிறந்த கரோலினா, தனது 6 ஆவது வயதில் 2015 இல் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியதாக அமெரிக்க தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *