
நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் பல்வேறு தடவைகள் எரிபொருட்களை ஏற்றிய கப்பல்கள் நாட்டிற்கு வருகைதந்தாலும் தற்போது வரை எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நீங்கும் நிலை காணப்படவில்லை.
தொடர்ச்சியாக அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசைகளில் மக்கள் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.
இவ்வாறாக நீண்டவரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குமிடையே வாக்குவாதங்களும் மோதல்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில் நேற்றையதினம் கண்டி பகுதியில் தலாத்துஓயா மாரஸ்ஸன பலநோக்குக் கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு போத்தலொன்றுடன் சென்ற நபர் பெற்றோலை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை கேட்க ஊழியரும் போத்தலில் பெற்றோல் வழங்க மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த நபர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்மீது தாக்குதலை மேற்கொண்டார்.
குறித்த தாக்குதால் ஊழியரின் மூன்று பற்கள் உடைந்துள்ளதுடன் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

