யாழில் உணவகங்களில் விறகு மூலம் உணவு சமைக்கப்பட்டாலும், உணவுப் பொருட்களின் விலைகள் உச்சத்தை தொடுகின்றன என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு இந்த ஜனாதிபதி உட்பட பிரதமரும், அமைச்சரவையும் தான் காரணம்.
இந்த பொருளாதாரப் பதிப்பு சகல மக்களையும் பாதித்து வருகின்றது. அதற்கான போராட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. அதிகளவில் இந்த பொருளாதாரப் பதிப்பு தென்னிலங்கை மக்களைப் பாதித்து வருகின்றது. வடக்குகிழக்கு மக்கள் கடந்த 30 வருடங்களாக பொருளாதார பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
வடக்கு கிழக்கு மக்கள் பொருளாதாரப் பிரச்சனையை சமாளித்து வருகின்றனர். யுத்தகாலத்தில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் தங்களது உணவுத்தேவையை நிவர்த்திசெய்து கொண்டுள்ளனர்.
யுத்தம் முடிந்து 13 வருடங்களின் பின்னர் மக்கள் இந்த பொருளாதார பிரச்சனையில் பல்வேறு துன்பத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த பொருளாதார நெருக்கடியினை அரசியல் அமைப்போ, அரசியலமைப்பு தலைவர்களோ, அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ கவனத்தில் கொள்ளவில்லை என்பது ஒரு கவலைக்குரிய விடயம்.
அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் கிராமத்தில் இருந்து நகரத்தை வந்து செல்லும் வேளையில்
களைப்பிற்காக சிற்றுண்டிகளை உண்கின்றனர். தற்போது ஒரு வடையும் டீ உம் குடிப்பதற்கு 220 ரூபாய் தேவைப்படுகின்றது.
நாம் சிற்றுண்டி உரிமையாளருக்கு சற்று மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். யாழில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவினாலும், விறகை பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றனர். எனினும் உணவின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியவில்லை.- என்றனர்.


