ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடந்தப்பட்ட இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்!

<!–

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடந்தப்பட்ட இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்! – Athavan News

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடந்தப்பட்ட 7 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் கொடி பொருத்திய சரக்கு கப்பலை கைப்பற்றினர்.

குறித்த கப்பலில் இருந்த 7 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனை ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் அல்புசைதி உறுதிப்படுத்தினார்.

தற்போது குறித்த ஏழு இந்திய மாலுமிகள் உள்ளிட்ட  14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *