புலமைப்பரிசில் பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளி விரைவில்!

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மே மாதம் முதல் வாரத்தில் வெட்டுப்புள்ளிகளை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல கூறியுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்டு, மார்ச் மாதம் 13ஆம் திகதி அதன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இந்தப் பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களிலும் 108 விசேட பரீட்சை நிலையங்களிலும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *